News March 25, 2025
மக்களே கட்டாயம் மிஸ் பண்ணாதீங்க

நீலகிரி: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News September 16, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News September 15, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி நகராட்சி பகுதிகளுக்கு சீனிவாசா திருமண மண்டபத்திலும், நெல்லியாலாம் பகுதி பாண்டியர் குடோன் பகுதியிலும், உள்ளத்தி பகுதிகளுக்கு உள்ளத்தில் சமுதாயக் கூட்டத்திலும், நிலக்கோட்டை பகுதிகளுக்கு பாட்டவயல் எம்வி சன்ஸ் கட்டிடத்திலும் நடைபெறுகிறது.
News September 15, 2025
அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கிய அரசு கொறடா

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், அன்புக்கரசன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவ, மாணவிகளில் 23 மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில் ரூ.2,000/- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் .ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.