News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 15, 2025
புதுச்சேரி: சிறையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு

புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில், நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்து, குற்றவியல் நீதிபதி ஏஸ்வந்தராவ், மாவட்ட சட்டபணிகள் ஆணைய நீதிபதி ரமேஷ் ஆகியோர் காலப்பட்டு மத்திய சிறையினை ஆய்வு செய்ய வந்தனர். தொடர்ந்து நீதபதிகள் சிறையின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். சிறையில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து சிறை வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
News December 15, 2025
புதுச்சேரி: ரூ.1,77,500 சம்பளம்..அரசு வேலை

புதுச்சேரி மக்களே, UPSC தேசிய பாதுகாப்பு அகாடெமியில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு போதுமானது, சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2025 தேதிக்குள் <
News December 15, 2025
புதுவையில் முதல்வரிடம் விவசாயிகள் மனு

புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், நேற்று சட்டப்பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெறுவது போல புதுவை மாநிலத்திலும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து கிராம புறத்திலும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு உலர் களங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.


