News August 11, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News December 23, 2025
JUST IN: கள்ளக்குறிச்சியில் திடீர் ரத்து!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகின்ற
26.12.2025 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
கள்ளக்குறிச்சியில் 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <
News December 23, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் நற்செய்தி

தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம் காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதி உடையோர் வரும் 31 ஆம் தேதிக்குள் (https://awards.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.


