News May 17, 2024
மக்களுக்கு மாவட்ட காவல்துறை அறிவுரை

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மே 17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மரத்தடி, பழைய கட்டிடங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவைகளில் நிற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
Similar News
News September 17, 2025
நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்சிகள் சார்பில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருநெல்வேலி சந்திப்பு சாலை குமரன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.
News September 17, 2025
நெல்லை: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

நெல்லை மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) *ஷேர்
News September 17, 2025
நெல்லை: ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டுமா?

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் அம்பாசமுத்திரம் வேலுச்சாமி திருமண மண்டபத்தில் வைத்து இன்று(செப்.17) காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆதார் பெயர் மாற்றம், திருத்தம், போன் நம்பர் இணைப்பு போன்ற சேவைகளை இதில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.