News April 4, 2025

மக்களுக்கு மாவட்ட காவல் துறை அறிவுறுத்தல்.

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் பொது மக்கள் தங்களின் மொபைல் போன்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும் அவ்வாறு வரும் அழைப்புகள் உங்களிடம் மோசடி செய்யும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது.#cybercrime #1930

Similar News

News November 27, 2025

திருப்பத்தூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

திருப்பத்தூரில் மஞ்சப்பை விருதுகள்- ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பத்தூரில், பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் சிறந்த 3 பள்ளிகள்,3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு 2025-2026ன் மஞ்சப்பை விருதுகள் முதல் பரிசு 10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ 5 லட்சம், மூன்றாம் பரிசு 3 லட்சம் என வழங்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.1.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 27, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பெயரில் நேற்று (நவ.26) இரவு – இன்று (நவ.27) காலை வரை, ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது . இது,. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். பின்னர், ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!