News May 15, 2024

மக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்ற நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில்,  நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 27, 2025

நாகை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் நாகை மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

நாகை: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் இன்று காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குமரிக்கடல் அருகே நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு காற்று சுழற்சி காரமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2025

நாகை: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

image

நாகை மாவட்டத்தில் வயல்கள் ஏதேனும் மழைநீரில் மூழ்கி இருந்தால், பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீர் வடிந்த பிறகு விவசாயிகள் ஏக்கருக்கு யூரியா, ஜிப்சத்துடன் கூடிய வேப்பம் புண்ணாக்கை வயலில் இடவேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!