News April 6, 2025
மகிபாலன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள் இல்லத் திருமண மண்டபத்தில் ஏப்ரல்-09, அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்கள், டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பெறுவதற்கு, தாட்கோ இணையதளத்தின் www.tahdco.com வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளார்.
News April 12, 2025
சிவகங்கை: பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும் கோயில்

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*
News April 12, 2025
சிவகங்கை: மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்

சிவகங்கையில் மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கோவில்பட்டி, புதுக்கோட்டை, ராஜபாளையம், திருச்சி, நெய்வேலி, திருநெல்வேலி, தென்மண்டல காவல்துறை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே ரூ 51,000, ரூ 31,000, ரூ.21,000, ரூ.11,000 என ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.