News April 9, 2025
மகாவீர் ஜெயந்தி அன்று மது விற்பனைக்கு தடை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10ம் தேதி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கூடங்கள் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமைந்துள்ள ரிஷஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (நவ.24) நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாற்றிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.
News November 24, 2025
இராணிப்பேட்டை: ஹாக்கிஆடவர் ஜூனியர் உலக கோப்பை விழா!

இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான கோப்பையை அம்மூர், The GeeKay உலகப் பள்ளி வளாகத்தில் இன்று நவ-24 நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தி, ஹாக்கி விளையாட்டு விரர் வீராங்கணைகளுடன் அமைச்சர் கொடியசைத்து தொடங்கினார். உடன் வட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், இராணிப்பேட்டை ஹாக்கி அசோசியேசன் தலைவர் இருந்தனர்.


