News March 29, 2025
மகாத்மா ரயிலை நிறுத்திய சின்னாளப்பட்டி மக்கள்!

திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.
Similar News
News December 10, 2025
கொடைக்கானலில் அதிரடி கைது!

கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சுற்றுலா பயணிகளுக்கு போதைக் காளான் வழங்கி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் போதைக் காளான் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 10, 2025
திண்டுக்கல்லில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025 அன்று சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.
News December 10, 2025
வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


