News August 8, 2024

மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு

image

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 11, 2026

குமரி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

image

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<> கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 11, 2026

குமரி : இதை செய்யாதீர்கள்.. எஸ்பி எச்சரிக்கை

image

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை

image

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் கெலன் முரேன். இவர் கன்னியாகுமரியில் நிலம் கிரையம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ். பி. யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!