News March 20, 2024
மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை.

திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூந்தோட்டம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் அவர் உயிரிழந்ததிலிருந்து ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 5, 2025
திருவள்ளூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 5, 2025
திருவள்ளூரில் 3.89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் 3.89 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
திருத்தணி: ராணுவ வீரர் வீர மரணம்!

திருத்தணி அடுத்த எஸ்.ஜே புரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(30). இவர் இன்று(டிச.4) காலை ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் குண்டடிபட்டு வீர மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு அந்த கிராமம் ஆழ்ந்த சோகத்தில் முழுகியுள்ளது. வீர மரணம் அடைந்த சக்திவேலுக்கு தாய், தந்தை, இரண்டு சகோதரிகள், மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


