News March 28, 2025
மகள்களுக்கு சொத்தில் முன்னுரிமை அளிக்கும் ஊர்

ராமநாதபுரம், திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூரில் மகள்களுக்கு முன்னுரிமை அளித்து சொத்து எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள பாகம்பிரியாள் அம்மன் என்கின்றனர்.அப்பகுதி மக்கள். விஷ கடிக்கு ஆளானவனர்கள் இக்கோயிலில் உள்ள வாசுகி தீர்த்ததில் குளிப்பதன் மூலம் குணமடைவார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இதனால் இந்த அம்மன் மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். *ஷேர் பண்ணுங்க
Similar News
News November 26, 2025
ராம்நாடு: வேன் – கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் ராமேஸ்வரம் சென்று விட்டு சென்னைக்கு சுற்றுலா வேனில் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் இன்று காலை சென்றனர். அப்போது ஆந்திரா – ராமேஸ்வரத்திற்கு வந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதியது. காரில் பயணித்த பைடி சாய்(23), நவீன்(22) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர், காரில் பயணித்த 4 பேர், வேனில் பயணித்த 5 பெண், 9 ஆண் காயமடைந்னர். உச்சிப்புளி போலீசார் விசாரனை.
News November 26, 2025
BREAKING ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று (நவ 26) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News November 26, 2025
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


