News November 22, 2024

மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 

image

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

விருதுநகர்: காவல்துறை சிசிடிவி கேமரா சேதம், 4 பேர் கைது

image

சித்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் நேற்று இந்த சிசிடிவி கேமராக்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக தகவல் வந்தது. இந்நிலையில் திருச்சுழி போலீசாரின் விசாரணையில் கேமராக்களை சேதப்படுத்தியதாக வயல்சேரியை சேர்ந்த மணிகண்டன், சித்தலக்குண்டை சேர்ந்த தமிழ்சிங்கம், ராம்குமார் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News September 17, 2025

விருதுநகர்: வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

மதுரை – தூத்துக்ககுடி தேசிய நெடுஞ்சாலையில் கல்குறிச்சி புற வழிச்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வழிப்போக்கர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இறந்த நபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 17, 2025

விருதுநகர்: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

விருதுநகர் மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) *ஷேர்

error: Content is protected !!