News April 3, 2025
மகளிர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 18, 2025
தீராத நோய்கள் தீர்க்கும் தீர்த்த மலை கோயில்

ராமரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் தமிழநாட்டில் இரண்டு உள்ளன. ஒன்று ராமேஸ்வரம் மற்றொன்று தர்மபுரி தீர்த்தகிரி மலை கோயில். ராமர் அயோத்தி திரும்பிய போது சிவனுக்கு பூஜை செய்ய தனது அம்பை எய்து உருவாக்கிய தீர்த்தம் தான்இங்குள்ள ராமர் தீர்த்தம். இதனாலேயே மூலவர் தீர்த்தகிரிஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார். இங்குள்ள தீர்த்ததில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தர்மபுரியில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <
News April 18, 2025
பள்ளி மாணவி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

பெண்ணாகரம் வட்டம், நாகமரை ஊராட்சி ஏமனூர் அருகே ஊ.ஒ.ந.நி பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன் சுசீதரன் என்பவர் மாணவி அனிதாவை கடுமையாக தாக்கியதால் மண்டை உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்து வந்ததாகவும் மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் பள்ளி மாணவி சார்பில் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.