News August 25, 2024
மகளிர் காவலர் கொலை செய்யப்படவில்லை

மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட மினி கொலை செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மைக்கு மாறானது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தங்கை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
குமரி: SBI வங்கி வேலை; நாளை கடைசி நாள்

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான 103 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 – 42 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் – ரூ.97 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(நவ.17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் <
News November 16, 2025
குமரி: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு தென்காசி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News November 16, 2025
குமரி: ரூ.8 லட்சம் மோசடி.. தாய், மகள் கைது

சேலம் இளம்பிள்ளை பகுதி நாகராஜன் ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம் குளச்சல் மெஜிலா (41) இவரது மகள் ஷானிகா (20) ஆகியோர் ஆன்லைனில் ஜவுளி வாங்கி ஜிபேயில் பணம் அனுப்பி உள்ளனர். ரூ.1 அனுப்பி ஸ்கிரீன் ஷாட்டில் திருத்தி முழுதொகை அனுப்பியதாக நாகராஜனை நம்ப வைத்துள்ளனர். ரூ.8 லட்சம் மோசடி செய்திருப்பதை தெரிந்த நாகராஜன் சேலம் போலீசில் அளித்த புகார்படி நேற்று தாய், மகள் நேற்று கைதாகினர்.


