News August 16, 2024
மகளிர் உரிமைத் தொகை ₹1000 .. அதிகாரப்பூர்வ விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News November 25, 2025
மகாவீரர் பொன்மொழிகள்

*தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.
*தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.
*ஆன்மிக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.
*நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.
News November 25, 2025
விசிகவே ஒரு பல்கலை தான்: திருமாவளவன்

அம்பேத்கர் கனவை சிதைப்பதே பாஜகவின் நோக்கம் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். வெயில், மழை பாராது பொருளில்லாமல் மந்தைகளை போல் மக்கள் காத்துக் கிடக்கும் போக்கு கொண்ட அரசியல் மாற வேண்டும் என்றார். எனவே, ஒவ்வொருவரும் அரசியலில் தெளிவுபெற வேண்டும் என்ற திருமா, அதற்காக கல்லூரி செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் விசிகவே ஒரு பல்கலை தான் என குறிப்பிட்டார். உங்கள் கருத்து என்ன?
News November 25, 2025
‘விஷால் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை’

லைகா தொடர்ந்த வழக்கில், கடனாக பெற்ற ₹21.29 கோடியை 30% வட்டியுடன் திருப்பி செலுத்த விஷாலுக்கு சென்னை HC தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், வட்டி மட்டுமே ₹40 கோடி செலுத்தும் அளவு விஷால் பெரிய பணக்காரர் அல்ல என வாதிடப்பட்டது. அப்படியானால், விஷாலை திவாலானவர் என அறிவிக்க தயாரா என HC அமர்வு கேள்வி எழுப்பியது. தனி நீதிபதியின் உத்தரவுக்கும் HC தடை விதித்தது.


