News August 17, 2024
மகளிர் உரிமைத்தொகை பொய் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனு வழங்கலாம் என கடந்த 2 நாட்களாக வாட்ஸ் ஆப் மூலமாக தவறான செய்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் தவறானது. பொய் தகவல் பரப்புபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

OLX App மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பயனர்களை குறிவைத்து, மோசடிக்காரர்கள் வாங்க விருப்பம் காட்டுவதாக சொல்லி Google Pay, PhonePe போன்ற அப்களில் பணம் பெறுவதற்கான போலி லிங்குகளை அனுப்புகின்றனர். அதில் பின் எண் பதிவு செய்யும்படி கூறுவர். அப்படி செய்தால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் இழக்கும் அபாயம் உண்டு. எனவே ஏமாற வேண்டாம். சந்தேகத்திற்கு 1930 அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.
News September 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தீபாவளி 2025 வரும் நிலையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி 30.09.2025க்கு முன்னர் இ-சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
News September 18, 2025
கிருஷ்ணகிரியில் 12ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அலேகுந்தாணி கிராமத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திபட்டான் நடுகல் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகலில் வீரர் புலியை வெற்றி கொண்ட காட்சியுடன் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு கிராமத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க*