News August 25, 2024
மகளிடம் அத்துமீறல்; தந்தை மீது வழக்கு

காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது தொழிலாளி. இவர் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயதுடைய தனது மகளை இன்று மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காட்டுமன்னார்கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
கடலூர் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

கடலூர் அருகே இன்று பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாருமதி (15), விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அனுப்பிவைக்கப்பட்ட மாணவர் செழியனும் (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி விபத்தில் உயிரிழந்தது கடலூர் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News July 8, 2025
கடலூர் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர்

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோல ரயில்வே நிர்வாகமும் விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.
News July 8, 2025
கடலூர்: பள்ளி வாகனத்தில் பயணித்தவர்கள் விவரம்

கடலூர் அருகே இன்று பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனத்தில் பயணித்த மாணவர்கள் சாருமதி (15), விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் மற்றும் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் சங்கர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.