News August 25, 2024
மகளிடம் அத்துமீறல்; தந்தை மீது வழக்கு

காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது தொழிலாளி. இவர் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயதுடைய தனது மகளை இன்று மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காட்டுமன்னார்கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
கடலூர்: ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

சிறுதொண்டமாதேவி முந்திரி தோப்பில் கள்ளச்சாராயம் காட்சியதாக காடாம்புலியூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட மேகநாதன் (37) என்பவர் மீது கொள்ளை, அடிதடி, சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மேகநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.
News November 16, 2025
கடலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வில் 556 பேர் ஆப்சென்ட்

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள்-1 தேர்வானது 12 மையங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத 4,191 பேர் விண்ணப்பம் அளித்தனர். ஆனால் அவர்களில் 3635 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 556 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் இன்று (நவ 16) நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள்-2 தேர்வானது 53 மையங்களில் நடைபெற உள்ளது.
News November 16, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் (நவம்பர் 15) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


