News March 19, 2025

மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கிருமி நாசினி புகைக்கருவிகள் 

image

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் என 19 மருத்துவமனைகளுக்கும் தலா ஒன்று வீதம் 19 கிருமிநாசினி புகைக்கருவிகள் (Fogger Machine) தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடமிருந்து (TNMSC) கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <>லிங்க்<<>>

News March 21, 2025

பிரபல ரவுடி சுட்டிபிடிக்கப்பட்டார்

image

சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்யும்போது, அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.

News March 21, 2025

சென்னையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 26.03.2025- 28.03.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 8668108141 /8668102600 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!