News December 5, 2024
மகனால் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிரிழப்பு

திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகர் 4ஆவது தெருவில் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாய் லட்சுமி சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
திருச்சி: தடுப்பு கட்டையில் மோதி சிதறிய கார்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சரத்பாபு என்பவர் கேரளா மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக கல்லுப்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.