News September 14, 2024

பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கிரிவலம் மாதம் மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 17.09.2024 செவ்வாய்க்கிழமை காலை 11.27 முதல் 18.09.2024 காலை 9.10 வரை உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 5, 2026

தி.மலை: நண்பனால் தடுக்கப்பட்ட பெரும் சம்பவம்!

image

தி.மலை: கண்ணமங்கலம் அருகே, கங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை, உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்தார்.நண்பர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பாலாஜி, அவர்களைச் சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் வேலூரைச் சேர்ந்த உமாபதி மற்றும் மணிவண்ணன் எனத் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

தி.மலை அருகே நொடி பொழுதில் விபத்து – பறிபோன உயிர்!

image

வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் சீனிவாசன். இருவரும் தனியார் பஸ் டிரைவரைகள். இவர்கள் வேலை விஷயமாக செய்யாருக்கு மோட்டார்சைக்களில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். மலையூர் கிராமம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மருத்துமனையில் அனுமதித்த போது சீனிவாசன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

News January 5, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!