News March 25, 2025
போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
Similar News
News December 9, 2025
சேலம்: விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் முழு மானியம்

சேலம் மாவட்ட தோட்டக்கலைத் துறையின் மூலம், செயல்படுத்தப்படும் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மார்க்கோனி மற்றும் தேக்கு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வரப்பு ஓரத்திற்கு ஒரு ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நட 500 மரக்கன்றுகளும் என ஒரு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டர் நடவு செய்ய வழங்கப்படும் என்றார்.
News December 9, 2025
சேலம்: கேழ்வரகு விவசாயிகளுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் கேழ்வரகு பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசாணையில் உள்ள நெறிமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தினால், அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் www.tncsc.tn.gov.inஇணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக மைசூரில் இருந்து சேலம் வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரு – தூத்துக்குடி ரயில் (06283) டிசம்பர்-23,27 தேதியில் மைசூரில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி – மைசூரு ரயில் (06284) டிசம்பர்-24,28 தேதியில் தூத்துக்குடியில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மைசூரு சென்றடையும்.


