News March 29, 2024
போளூர்: பள்ளிக்கு விரைந்த ஆட்சியர்

2024 மக்களவை தேர்தலையொட்டி போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (29.03.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News August 31, 2025
தி.மலை: வண்டியில் இருந்து தள்ளிவிட்டு பாலியல் தொல்லை

தி.மலை: வந்தவாசியில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் இரவு வீட்டிற்கு மொபெட்டில் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்ற சந்தோஷ் என்பவர் மொபெட்டில் மோதி, பெண்ணை தள்ளிவிட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வர சந்தோஷ் அங்கிருந்து தப்பினார். புகாரின் பேரில் நேற்று போலீசார் சந்தோஷை கைது செய்தனர்.
News August 31, 2025
பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(43). இவா்,நிலத்தரகா் ஆக.28ம் தேதி பணி நிமித்தமாக பைக்கில் செய்யாறு – ஆற்காடு சாலையில் தூளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்துள்ளாா். இதில்,அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தாா். செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.
News August 31, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (30.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.