News January 23, 2025
போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர்களிடம் விசாரணை

கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்றிரவு 8 மணிக்கு 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவது போல் நடித்து நாங்கள் என்.ஐ.பி.போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்ததில் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Similar News
News December 15, 2025
தேனி: சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு

கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது 3.5 வயது மகன் சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, முன்புறமாக குப்புற விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று(டிச.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
News December 15, 2025
தேனி: வீட்டில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராணி (69). இவர் நேற்று முன்தினம் பாத்ரூம் சென்ற பொழுது அங்கு வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று (டிச.14) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 15, 2025
தேனி: மனைவியின் தங்கையை தாக்கிய கணவர் கைது

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பூமாதா. இவரது அக்கா கோமதாவின் கணவரான சுரேஷ் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இதுகுறித்து பூமாதா கேட்ட நிலையில் சுரேஷ் அவரை சரமாரியாக தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை நேற்று (டிச.14) கைது செய்தனர்.


