News January 23, 2025
போலீசார் நடத்தும் போட்டி: வென்றால் பணம் பரிசு

நாமக்கல் போலீசார் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுகிய காணொளி (Reels )உருவாகும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் வரும் 27.01.2025 முன் தங்கள் படைப்பை பதிவு செய்யலாம். இதில் முதல் பரிசாக ₹10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News October 31, 2025
பரமத்திவேலூர் அருகே தற்கொலை!

பரமத்திவேலூர் அருகே தன்னாசிகோவில்மேடு பகுதியைச் சேர்ந்த தனசீலன் (25) தினமும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலூர் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
News October 31, 2025
ராசிபுரத்தில் விஷம் குடித்து தற்கொலை!

ராசிபுரம், எல்லப்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சின்னுசாமி மகன் சதீஷ்குமார்(37), கடந்த 10 நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 28-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி, அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் தனி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலும் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.
News October 31, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு காவல்துறையின் தகவல் நம்முடைய பாஸ்போர்ட், ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தேவை இல்லை. தற்பொழுது services.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்து உரிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு!


