News August 8, 2024
போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது

விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று, புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்ற நபரிடம் விசாரித்தபோது, அவா் போலீசார் ஒருவரைத் தாக்கி, தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரையும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். விசாரணையில் அவர் பாலாஜி (28) என்பதும், குற்றச்சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரியவர, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
Similar News
News November 14, 2025
விழுப்புரம் விவசாயிகளின் கவனத்திற்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை(நவ.15) இறுதி நாள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் இழப்பை ஈடுசெய்ய மாவட்டத்தில் 25-26ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெல், உளுந்து, வேர்க்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு, ஆதாருடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 14, 2025
விழுப்புரம்: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

விழுப்புரம்மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 14, 2025
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் மின் தடை

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனம், அய்யந்தோப்பு, உப்புவேலூர், கிளியனூர், சாரம், மொளச்சூர், கீழ்சித்தாமூர், எண்டியூர், தென்பசார், சலவாதி, செஞ்சி & மயிலம் சாலை போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


