News March 26, 2025
போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் வீரன் என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புகார் கொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று திருக்கோவிலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ்குமார் நீதிபதி போலி வழக்கறிஞர் வீரன் என்பவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளத்தில் சொறுகிய அரசுப் பேருந்து!

உளுந்தூர்பேட்டை வட்டம் சிறுத்தனூர் கிராமத்தின் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் உள்ள வாய்க்காலில் இறங்கியது நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
News December 22, 2025
கள்ளக்குறிச்சி வாக்காளர்களே சூப்பர் UPDATE!

கள்ளக்குறிச்சி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
கள்ளக்குறிச்சி: 8ஆவது படித்தால் ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


