News October 24, 2024
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 4 பேர் கைது

பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 12, 2025
திருச்சி: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News December 12, 2025
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே<
News December 12, 2025
திருச்சி: ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தாநந்தம் ஊராட்சி புத்தாநத்தம்-9, இடையப்பட்டி-12 எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சி, கண்ணுடையான்பட்டி-12, முத்தபுடையான்பட்டி-12 எனவும், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணசமுத்திரம்-7, செம்மங்குளம்-1 எனவும், இனாம் குளத்தூர் ஊராட்சி ஆலம்பட்டி புதுார்-9, இனாம்குளத்துார்-2 எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.


