News April 29, 2025
போலி தங்கம் விற்று மோசடி: அக்கா, தம்பி சுற்றிவளைப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஆந்திராவைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் அறிமுகமாகி, தங்களிடம் அரைகிலோ தங்கக்கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா தனது அண்ணன் இர்பானிடம் தெரிவிக்க, இர்பான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, போலீசார் தங்கக்கட்டி வைத்திருந்த அக்கா, தம்பியை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அது பித்தளை என்பது தெரியவந்தது.
Similar News
News December 15, 2025
திருவள்ளூர்: சத்துணவு மையங்களில் வேலை! APPLY

மாவட்ட அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்து வருகை புரியாததால் பணி வேண்டாம் எனத் தெரிவித்த சத்துணவு மையங்களில், மீண்டும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. பூவிருந்தவல்லி ஊராட்சியில் 7, வில்லிவாக்கத்தில் 3, கடம்பத்தூரில் 1 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பதிவிறக்க இங்கே கிளிக் பண்ணுங்க!
News December 15, 2025
திருவள்ளூர்: நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது!

திருவள்ளூர் எஸ்.பி.க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்பு படை போலீசார் நாமக்கல் பகுதியில் பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இப்பதான் மைக்கேல்(44) என்பவரை கடந்த டிச.13ஆம் தேதி கைது செய்து, அவரிடமிருந்து ரூ.25,000 மதிப்புள்ள 5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, மணவாளநகர் போலீசாரிடம் நேற்று(டிச.14) ஒப்படைத்தனர்.
News December 15, 2025
திருவள்ளூருக்கு இ-பஸ் வரப்போகுது!

திருவள்ளூர்: சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாநகர மின்சார பேருந்து இயக்குவதற்காக, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சார தாழ்தள ‘ஏசி’ பேருந்துகளை, திருவள்ளூர் நகருக்கு இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. வழக்கமான பேருந்துகளை விட, மின்சார பேருந்துகள் நீளம் மற்றும் அகலமாக இருப்பதால், சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.


