News October 25, 2024
போலி இணையதள மோசடி சைபர் கிரைமில் புகார்

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாகக் கூறி சிலா் மோசடியில் செய்வதாக கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் பி.சந்திரசேகரன் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட முயன்ற நபா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

கிருஷ்ணகிரி மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<
News November 6, 2025
கிருஷ்ணகிரியில் மஞ்சள் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இன்று (நவ.06) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை பல்வேறு பகுதிகளில் மழையானது கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News November 6, 2025
கிருஷ்ணகிரி: நாட்டையே உலுக்கிய வழக்கில் குற்றவாளி கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராவை வைத்து விடியோ எடுத்த ஒடிசா மாநில பெண்ணை உத்தனப்பள்ளி போலீஸார் நேற்று (நவ.05) கைது செய்தனர். இந்நிலையில் நீலுகுமாரியின் ஆண் நண்பர் சந்தோஷ்(எ)சதீஷ்குமார், பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரை கைதுசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் தற்போது பெங்களூரு சென்றுள்ளனர்.


