News November 24, 2024
போலியான முதலீடு செயலிகள்: எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று இணையதளத்தில் பல போலியான முதலீடு செயலிகள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். (Investment Apps) குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் என்ற ஆசையை தூண்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
Similar News
News November 5, 2025
வத்தலகுண்டு வாலிபருக்கு கத்திகுத்து!

திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் பாண்டியராஜன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சித்தரேவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பைக் வேண்டும் என கேட்க பாண்டியராஜன் மறுத்க்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் பாண்டியராஜனை கத்தியால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சூரிய பிரகாஷை இன்று கைது செய்தனர்.
News November 5, 2025
திண்டுக்கல்;போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
திண்டுக்கல் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 5) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் குறைகள், மனுக்கள் பெறப்படும். பழனி நகராட்சியில் உடுமலை ஆயுரா வைஸ்யர் மடம், நிலக்கோட்டை வட்டத்தில் குல்லிசெட்டிபட்டி பொம்முச்சாமி திருமண மஹால், ரெட்டியார்சத்திரம் வட்டத்தில் அனுமந்தராயன் கோட்டை லொயோலா மண்டபம், சாணார்பட்டி வட்டத்தில் வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.


