News April 5, 2025
போரில் பூத்த ராணிப்பேட்டை

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..
Similar News
News February 24, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!
News February 24, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றி வந்த, 30 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News February 24, 2026
ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

சிபிஐ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டாம் செய்து பணம் பறிப்பதாக ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், 542 சிம் கார்டுகளை பயன்படுத்தி லட்சக் கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த சிங்கம்பல்லி கணேஷ்(36), பப்பலா கிஷோர் குமார்(36), செல்லா சந்தீப்குமார்(27), சனபதி பிரசாத்(28), தல்லா ராமகிருஷ்ணன்(29) ஆகியோரை கைது செய்தனர்.


