News December 31, 2024
போராட வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போராட்டத்திற்கு வருமாறு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 15, 2025
சென்னை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News November 15, 2025
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி!

பீகாரை சேர்ந்த மானவ்பஸ்வான் (48) எர்ணாகுளம் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர்-வ.உ.சி.நகர் அருகே வந்த போது, ரயிலில் படிக்கட்டுகளில் இருந்தவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிருந்தவர்கள் ரயில் செயினை நிறுத்தியவுடன், ரயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News November 15, 2025
சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறல்!

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த பெண், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின்ராஜ் (25) என்பவருடன் மொபைல் செயலி மூலம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டி, லிபின்ராஜ் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரின் புகைப்படத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில், போலீசார் லிபின்ராஜை கைது செய்தனர்.


