News June 12, 2024
போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து பணிகள் ஆரம்பம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த கோட்டைக்காடு முதல் பெண்ணாடம் செல்லும் உயர்மட்ட மேம்பாலத்தில் அணுகு சாலை அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மேம்பாலம் சாலை இணைப்பு போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பெண்ணாடம், சௌந்திர சோழபுரம் பகுதியில் மேம்பாலத்திற்கான அணுகு சாலை அமைக்கும் பணி நேற்று(ஜூன் 11) தொடங்கியது.
Similar News
News April 20, 2025
அரியலூர்: கடன் பிரச்னையை தீர்க்கும் பைரவர்

அரியலூர் மாவட்டம் தா. பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கால பைர்வர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சன்னதியில் கடன் பிரச்னை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்னையில் அவதிப்படும் உங்கள் நண்பகள் மற்றும் உறவினர்களுக்கு SHAREபண்ணுங்
News April 20, 2025
அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 20, 2025
காட்டுப்பன்றிகள் மோதல்: ஒருவர் படுகாயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.