News March 25, 2025
போராட்டத்தில் குதித்த நடிகை சோனா

நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்மோக்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான ஹார்ட் டிஸ்குகளை தனது மேனஜர் எடுத்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனியில் உள்ள பெப்சி யூனியனில் புகார் அளித்ததோடு, கடந்த சில நாட்களாக அங்கும் இங்கும் அலைக்கழிப்பதாக நேற்று (மார்.24) ஃபெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Similar News
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.
News November 23, 2025
சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


