News January 24, 2025
போதை பொருட்கள் இல்லாத காரைக்குடியாக மாற்றுவோம்

காரைக்குடியில் பள்ளிகளின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை விற்பனையை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், புகையிலை விற்பவர் குறித்து தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கூட தயாராக உள்ளதாகவும், கஞ்சா, புகையிலை இல்லாத காரைக்குடியை உருவாக்குவதே இலக்கு என்று காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், ரபி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இதுவரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ள நிலையில், மீதமுள்ள விவசாயிகளும் பிரீமிய தொகையை செலுத்தி பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலலிங்கம் தெரிவித்தார். வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, ஆதார் இணைத்த வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.
News November 25, 2025
சிவகங்கை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
சிவகங்கை: மின் கசிவு ஏற்பட்டு முதியவர் பரிதாப பலி

மதுரை தல்லாகுளம் மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் தாகீர்முகமது 60. இவர் தேவகோட்டை அருணகிரி பட்டினத்தில் உள்ள சகோதரி சவுரா பீவி வீட்டிற்கு வந்து இருந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மோட்டாரை இயக்கியுள்ளார். மின் கசிவு ஏற்பட்டு தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீரை எடுத்ததால் தாகீர் மீது மின்சாரம் பாய்ந்து பலி யானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


