News June 26, 2024
போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார். மாணாக்கர் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். எஸ்பி சந்தீஷ், கோட்டாட்சியர் ராஜ மனோகரன், கலால் உதவி ஆணையர் சாந்தி, மதுவிலக்கு டிஎஸ்பி ரமேஷ், கோட்ட ஆய அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.
Similar News
News November 20, 2025
ராம்நாடு: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி.. 2 பேர் படுகாயம்!

பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த 22 வயதான இளைஞர் சபரிவாசன் தனது நண்பர்கள் இருவர் என மூவருடன் ஒரே டூவிலரில் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து மணி நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்து மோதியதில் இளைஞர் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
ராம்நாடு: இன்று மின்தடை பகுதிகள்

ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று (நவ. 20) தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காலை 9 – மாலை 5 மணி வரை நம்புதாளை, முள்ளி முனை, காரங்காடு, எஸ்.பி.பட்டினம், அச்சங்குடி, தினையத்தூர், திருவெற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
News November 20, 2025
ராம்நாடு: மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் வீரிய காய்கறி விதைகள், தென்னங்கன்றுகள், பழச்செடிதொகுப்புகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. புனை மேம்பாட்டு இயக்கம் திட்டத்தில் பனை விதைகள், கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டுப்பொருட்கள் (கருப்பட்டி) தயாரிக்கும் கூடம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என ராம்நாடு கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


