News April 26, 2025
போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்

இளையான்குடி அருகே விவசாயி சிவசாமி(45) & தங்கச்சாமி(26). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, தூங்கி கொண்டிருந்த சிவசாமியின் தலை மீது தங்கச்சாமி பெரிய கல்லை போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, (வியாழன்) உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர்.
Similar News
News October 19, 2025
சிவகங்கை: தீபாவளிக்கு காவல்துறை அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தலில், தீபாவளி கொண்டாட்டத்தில் பாதுகாப்பை பின்பற்றுங்கள், அதிக ஒலி பட்டாசுகளை தவிர்க்கவும், குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வெடிக்கவும், மின் வயர்கள் இல்லாத இடங்களில் வெடிக்கவும், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News October 19, 2025
சிவகங்கைக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை.!

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக சிவகங்கையில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
சிவகங்கை: தவறவிட்ட பண பையை ஒப்படைத்த போலீசார்

தேவகோட்டை டைலர் கடை வைத்திருக்கும் வள்ளி என்ற பெண்மணி தீபாவளி திருநாளுக்கு பொருட்கள் வாங்க தேவகோட்டை பஸ் நிலையம் அருகே வரும்பொழுது அவர் வைத்திருந்த கட்டப் கீழே விழுந்தது அதில் 15000 மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்க பணம் 3000 ரூபாய் இருந்தது போக்குவரத்து பணிகள் இருந்தார் காவலர்கள் யோகராஜ் மற்றும் கௌதம் இதை எடுத்து அந்த பெண்மணியை அழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.