News August 14, 2024
போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.
Similar News
News November 28, 2025
தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 28, 2025
தென்காசி: டிகிரி போதும்.. அரசு வேலை – APPLY!

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 28, 2025
தென்காசி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)


