News January 22, 2025
போதமலை: 150 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், வெண்ணந்துார் அருகே உள்ள போதமலை. இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் விளைவிக்கும் பொருட்களை தலையில் சுமந்து கொண்டே கீழே வந்து விற்பனை செய்து வந்தனர். தார் சாலை வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வைத்தது. இந்நிலையில் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News December 3, 2025
நாமக்கல்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
நாமக்கல் ரயில் பயணச்சீட்டு நிலையம் இடமாற்றம்!

நாமக்கல் ரயில் நிலையம் வேட்டாம்பாடி அருகே செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தற்போது நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பயணச்சீட்டு அலுவலகம் தற்காலிகமாக முதல் தளத்திலுள்ள நடைமேடை எண்-1ல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் ரயில் பயணங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News December 3, 2025
நாமக்கல்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


