News September 29, 2025
போடி: டூவீலர் விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி

போடியை சேர்ந்தவர் கோபால்ராஜ். இவர் உறவினர்களுடன் திண்டுக்கல் சென்று போடிக்கு காரில் திரும்பினார். வழியில் தேனி ரத்தினம் நகரில் உள்ள அங்காடிக்கு சென்றனர். பொருட்கள் வாங்கிய பின் காருக்கு செல்ல ரோட்டை கடந்தபோது அல்லிநகரம் குறிஞ்சி நகர் மதன்குமார் 21, ஓட்டி வந்த டூவீலர் கோபால்ராஜ், மீது மோதி விபத்து நடந்தது. சிகிச்சையில் இருந்த கோபால்ராஜ் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 8, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 7, 2025
தேனி: மகளிர் உரிமைத் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தேனி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
கொடி நாள் நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

அனைத்து பகுதிகளிலும் முப்படை வீரர் கொடி நாள் இன்று 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தேனி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கொடி நாள் நிதிக்கு தனது நன்கொடையை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


