News March 29, 2025
போடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.
Similar News
News December 10, 2025
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 10, 2025
தேனி: பெண் தூக்கிட்டு தற்கொலை

இராஜதானி அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகு (44). இவருக்கு சற்று கண் குறைபாடு உள்ள நிலையில் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கண் குறைபாடு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த நாகு நேற்று (டிச.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
தேனி: வெந்நீரில் தவறி விழுந்து குழந்தை பலி!

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தம்பதி ராஜேஷ்கண்ணன்- கீர்த்திகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டிச.1 அன்று கீர்த்திகா, வெந்நீர் வைத்து விட்டு துணி எடுக்க சென்றபோது அங்கு 2வது மகள் பிரணிவிகா ஸ்ரீ வெந்நீரில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.


