News March 21, 2024

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் பகுதிகளில் பயங்கர வெடி சத்தம்

image

சமீபகாலமாக தொடர்ச்சியாக திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களை மிரட்டும் வகையில், வெடிச்சத்தம் கேட்கிறது. இதேபோல் இன்று காலை 9.40 மணிக்கு நடந்த பயங்கர வெடிச்சத்தம் குஜிலியம்பாறை, வேடசந்தூர், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெடிச்சத்தம் மீண்டும் கேட்டது.

News December 16, 2025

திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 300 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், சாணார்பட்டி அருகே, வடகாட்டுபட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 28). இவர், திண்டுக்கல் – நத்தம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்து காலனி அருகில் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!