News April 4, 2025
போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.
Similar News
News November 5, 2025
ஈரோடு: கடன் பிரச்சனை நீங்கனுமா?

ஈரோடு மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 5, 2025
ஈரோடு: இலவச தையல் இயந்திரம்! APPLY லிங்க்

ஈரோடு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.
4. மேலும், விவரங்களுக்கு 0424-2261405 எண்ணை அழைக்கவும். (SHARE செய்யுங்க)
News November 5, 2025
ஈரோடு அருகே பேருந்தில் இருந்து விழுந்தவர் பலி

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (65). இவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் படியில் நின்று பயணித்துள்ளார். வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது திடீரென நடராஜ் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


