News February 24, 2025

போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 பேர் மீது வழக்கு

image

உளுந்தூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீவிர வாகன சோதனை மேல் ஈடுபட்டனர். இதில் இருசக்கர வாகனங்களுக்கு உரிய சான்றிதழ்கள் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல், மது போதையில் வாகனம் இயக்குதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Similar News

News April 21, 2025

காயங்களுடன் முதியவர் மரணம் – பின்னணி என்ன?

image

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஏரியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அப்போது, இறந்தவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த காந்தி,(70) என தெரியவந்தது. அவர் பெரியமாம்பட்டில் உள்ள அவரது மகள் விஜயாவை பார்க்க சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார்.

News April 20, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! கள்ளக்குறிச்சி-9445000519, 04151-222449, சங்கராபுரம்-9445000520, 04151-235329, திருக்கோவிலூர்-9445000521, 04153-252316, உளுந்தூர்பேட்டை-9445000522, 04149-222255, கல்வராயன் மலை-9488776061, சின்னசேலம்-9445461907, 04151-257400, வானாபுரம்-8946097728. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்னுங்கள்.நண்பர்களுக்கும் பகிரவும்

error: Content is protected !!