News March 28, 2025

போக்குவரத்து துறையில் காலி பணியிடம் குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் ஏப்-14 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாட்களில் உரிய ஆவணங்களுடன் நேரில்சென்று பதிவினை சரிபார்க்க ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க..

Similar News

News April 5, 2025

அரியலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (ஏப்.05) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.

News April 5, 2025

ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

image

தஞ்சையைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தில் அவர் வளர்த்த 30 தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகக் கூறி, தர்மபுரியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் ரூ.1 கோடி பணத்தை ஏமாற்றி பெற்றதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News April 4, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் – 4) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள், அரியலூர் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!