News October 24, 2024
போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கோவை அருகேயுள்ள க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடியாக இங்கு சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமல். அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 16, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
கோவை வரும் பிரதமர் மோடி!

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் 19 – 21 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்கின்றனர்.


