News January 23, 2025
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று (ஜன.22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Similar News
News January 9, 2026
வந்தவாசி: நம்பி வந்த தோழியை சீரழித்த நண்பர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியாக வசித்த 25 வயது பெண்ணுக்கு, உதவி செய்வது போல் ஆசை காட்டி முகமது அலி, இம்ரான் உள்ளிட்ட நால்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஐந்து மாத கர்ப்பமான அப்பெண் அளித்த புகாரின் பேரில், நான்கு பேரையும் வந்தவாசி போலீசார் கைது செய்தனர். வறுமையைச் சாதகமாக்கி இழைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 9, 2026
தி.மலையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

ஆரணி அருகே தச்சூரில் கூலித் தொழிலாளி ரகுநாத்தின் மனைவி பிரியதர்ஷினி, இவர்களுக்கு 2வது குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகிறது. இந்நிலையில் பிரியதர்ஷினி குழந்தைக்கு பால் புகட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது, குழந்தையின் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 9, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


