News February 15, 2025

போக்குவரத்துக்கு இடையூறு தந்த பெட்டிக்கடைகள் அகற்றம்!

image

திருப்பத்தூர் மாவட்டம் நீதிமன்றம் பகுதியில் அத்துமீறி பெட்டிக் கடைகள் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் நகராட்சியிடம் புகார் அளித்தனர். அதன்படி இன்று (பிப்.15) இரும்பு பெட்டிக் கடைகளை கிரேன்கள் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

Similar News

News September 18, 2025

திருபபத்தூர்: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசெளந்திரவல்லி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு வியாபாரிகள் தங்களுடைய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் நபர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

திருப்பத்தூரில் இன்று மழை வெளுக்கும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

திருப்பத்தூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!